‘நீங்க வேணா பாருங்க’…திமுக கூட்டணி கட்சிகள் எங்களுடன் தான் வரப்போகின்றன: அமைச்சர் கடம்பூர் ராஜு

 

‘நீங்க வேணா பாருங்க’…திமுக கூட்டணி கட்சிகள் எங்களுடன் தான் வரப்போகின்றன: அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கின்றன. அதனால் திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளை துவக்கி விட்டன. திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனால் நேற்று அதிமுக நிர்வாகிகள் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

‘நீங்க வேணா பாருங்க’…திமுக கூட்டணி கட்சிகள் எங்களுடன் தான் வரப்போகின்றன: அமைச்சர் கடம்பூர் ராஜு

அக்கூட்டத்தின் முடிவில் முதல்வர் வேட்பாளராக யார் போட்டியிடுவார்கள் என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே திமுக நிர்வாகிகள் விபி துரைசாமி, குக செல்வம் என பலர் கட்சியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் திமுக பலம் குறைந்து கொண்டே வருகிறது.

‘நீங்க வேணா பாருங்க’…திமுக கூட்டணி கட்சிகள் எங்களுடன் தான் வரப்போகின்றன: அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்த நிலையில் திமுகவின் பெரும்பாலான கூட்டணி கட்சிகள் எங்களுடன் தான் வரப்போகின்றன என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக பெரிய பிளவை சந்திக்க உள்ளதால் ஸ்டாலின் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என கூறுவதாகவும் விபி துரைசாமி, குக செல்வம் என வெளியேறி விட்டதால் துரைமுருகன் அமைதியாக இருக்கிறார் என்றும் கூறினார்.