திரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்து-அமைச்சர் கடம்பூர் ராஜு

 

திரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்து-அமைச்சர் கடம்பூர் ராஜு

வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த ரூ.22 லட்சம் மதிப்பில் ஆட்டோமேட்டிக் ஆர்என்ஏ ரியாக்டர் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். ஆகிய புதிய பரிசோதனை கருவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று வழங்கினார்.

திரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்து-அமைச்சர் கடம்பூர் ராஜு

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகமே தனித்து இருக்க சொல்லும் போது ஒன்றிணைவோம் வா என்கிறார் மு.க.ஸ்டாலின். கொரோனா தடுப்பு பணி குறித்து அவர் உருப்படியான ஒரு ஆலோசனையும் கூறவில்லை, விலகி இருக்க வேண்டும், விழித்து இருக்க வேண்டும், தனித்து இருக்க வேண்டும் என்பது அரசின் கோஷம், ஆனால் ஒன்றிணைவோம் வா என்பது திமுகவின் கோஷம். சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது, 24மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூறய்வு செய்யப்பட்டு உரியவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றை குறைக்கும் பணியில் அரசு முழுமுச்சாக செயல்பட்டு வரும் நிலையில் சசிகலா விடுதலை குறித்தெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. திரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்து” எனக்கூறினா.