“ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது இல்லை; நகரத்துல ஓகே, கிராமத்துல?”

 

“ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது இல்லை; நகரத்துல ஓகே, கிராமத்துல?”

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “திரையரங்குகளில் படம் ஓடும் போது ஓடிடியில் திரைப்படத்தினை வெளியிட மாட்டோம் என்று கடிதம் கொடுத்தால் தான் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. கொரோனா ஊரடங்கு காலத்தில் சில திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியிடப்பட்டன. இதனை தற்காலிக ஏற்பாடாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன்.

“ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது இல்லை; நகரத்துல ஓகே, கிராமத்துல?”

திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். 3 பேரும் இப்பிரச்சினை தொடர்பாக அமர்ந்து பேச வேண்டும். நகரத்தில் உள்ள மக்களுக்கு ஓடிடியில் பார்க்கும் வசதி இருக்கும். கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அந்த வசதி கிடையாது.

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது கிடையாது. திரையரங்குகளில் ஓடிய பின்னர் ஓடிடியில் வெளியிடலாம். முதல் ரீலிஸ் திரையரங்குகளிலும், 2வது ரீலிஸ் ஓடிடியிலும் வெளியிடலாம். ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்து ஓடிடியில் வெளியிட வேண்டும்.