நாங்க சசிகலாவுக்கு துரோகம் பண்ணவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

நாங்க சசிகலாவுக்கு துரோகம் பண்ணவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

யாருக்கும் நாங்கள் தூரோகம் பண்ணவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு தூரோகம் செய்தார் என்றும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தூரோகம் செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறிகிறார். நாங்கள் யாருக்கும் துரோகம் பண்ணவில்லை. மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார். மத்தியரசில் பங்கு வகித்த போது தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்தவர்கள் திமுகவினர். நீட்தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கொண்டு வந்தது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கையெழுத்து போட்டது, நெய்வேலி நிலக்கரி ஆலை பங்கு தனியாருக்கு விற்பனை, காவிரி நீர் பிரச்சினை முல்லை பெரியாறு, கச்சதீவு பிரச்சினை என தங்களது சுயநலத்திற்காக தமிழர்கள் உரிமைகளை காவு கொடுத்தவர்கள் திமுகவினர்.

நாங்க சசிகலாவுக்கு துரோகம் பண்ணவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

குடும்பத்தினருக்கு பதவிகளை பெறுவதற்கு திமுகவினர் டெல்லி சென்றனர். மத்தியில் குடும்பத்தினற்கு பதவியை பட்டா போடுவதற்கு தான் தமிழர்களின் வாக்குகளை பெற்று டெல்லிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தது திமுக. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கேட்டு டெல்லிக்கு செல்லவில்லை. தொடர் மழை பாதிப்பு, புரெவி புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்கதான் முதல்வர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். இந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை, தமிழர்களின் உரிமைகளை கேட்க வந்ததாக முதல்வர் தெளிவாக கூறியிருந்தார். குண்டாறு – காவிரி இணைப்பு திட்டம் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டும் விழாவிற்காக பிரதமரை அழைப்பதற்காகவும் முதல்வர் டெல்லி சென்றார்.மு.க.ஸ்டாலின் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது திமுகவினர் எந்த வகையில் தமிழர்களுக்கு நியாயத்தினை பெற்று தந்துள்ளார்கள். எனவே முதல்வர் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது. காங்கிரஸ் அழைப்பு விடுத்தது குறித்து நடிகர் கமலஹாசன்தான் முடிவு செய்ய வேண்டும். நல்ல முடிவாக எடுத்தால் கமல்ஹாசனுக்கு நல்லது நடிகர் கமல்ஹாசன் அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால் நல்ல முடிவினை எடுப்பார். காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி பேச்சு கேட்டு சென்றால் கமல்ஹாசன் காணமால் போய்விடுவார்” எனக் கூறினார்.