எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “திமுக- காங்கிரஸ் கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய காரணத்தில் அதிமுக 2016இல் எந்த கூட்டணியும் அமைக்கமால் 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2016 தேர்தலின் போது ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளார்.

குடிமராமாத்து என்ற அற்புதமான திட்டத்தினால் இன்றைக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத அம்மா நகரும் நியாயவிலைக்கடை, அம்மா மினி கிளினிக், மருத்துவ கல்வியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை, கொரோனா காலத்தில் அனைவருக்கு நிவாரண தொகையை இந்த அரசு வழங்கியுள்ளது.

எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

முதல்வர் மேற்கொண்ட சீரிய நடவடிக்கை காரணமாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று முற்றிலுமாக இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமரே பாராட்டி உள்ளார். கொரோனா காலத்தில் இந்தியாவிலே கள பணிக்கு சென்ற ஒரே முதல்வர் என்ற பெருமையை நமது முதல்வர் பெற்றுள்ளார். இவையெல்லாம் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானியர் சாதனை படைக்க கூடிய முதல்வராக உள்ளார். என்றைக்கு தேர்தல் நடந்தாலும் அதிமுக 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம், இன்றைக்குள்ள சூழ்நிலையில் 234 தொகுதியில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்தவர்கள் தற்பொழுது எங்கள் கூட்டணியில் இருப்பதாக நாங்களும் கூறியுள்ளோம், அவர்களும் தெரிவித்துள்ளார்கள். போகிற போக்கினை பார்த்தால் திமுக கூட்டணியில் இருக்கும் பல்வேறு கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. காலம் எவ்வளவு தண்டணை கொடுத்து இருக்கிறது திமுகவிற்கும், திமுக தலைவருக்கும். திமுகவினர் எம்ஜிஆர் பற்றி பேசாத இழிவான வார்த்தைகளே கிடையாது. எமஜிஆர் கட்சி தொடங்கிய போது அவரை மலையாளி என்று கூறினார்கள், நடிகனுக்கு நாடாள தெரியாது என்றார்கள். அதிமுக எம்ஜிஆர் படம் போன்று நூறு நாள் ஓடுமா என்று விமர்சனம் செய்தவர்கள் திமுகவினர்.

1973 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் எம்ஜிஆர் பேசும் போது மைக்கினை நிறுத்தினார்கள். மைக் இல்லமால் எம்ஜிஆர் பேசினார். அப்போது அவர் மீது செருப்பை கொண்டு எறிந்தார்கள். இவ்வளவு தூரம் எம்ஜிஆரை கேவலப்படுத்தியவர்கள் காலசூழ்நிலை இன்றைக்கு அவர்கள் வாயினால் எம்ஜிஆர் ரசிகன், அவர் பக்தன் என்று சொல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எம்ஜிஆர் ஆன்மா அவர்களுக்கு பாடத்தினை கற்று கொடுத்து இருக்கிறது.

எம்ஜிஆர் பெயரை சொல்லமால் யாரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. எம்ஜிஆர் ஆட்சியை அவர் ஆரம்பித்த அதிமுகவால் தான் அமைக்க முடியும். மற்றவர்கள் இதைப்பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. மக்களை சந்திக்கமால் வெற்றி பெற்ற ஒரு தலைவர் என்றால் அது எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என்பது ஊரறிந்த உண்மை” என்றார்.