முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம்- கடம்பூர் ராஜூ ஆவேசம்

 

முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம்- கடம்பூர் ராஜூ ஆவேசம்

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும், அடுத்தவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, “அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்ய முடியும். அதனை ஏற்கனவே முடிவு செய்து அறிவித்து விட்டோம். எனவே அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன்தான் நாங்கள் தேர்தலை சந்திப்போம். அடுத்தவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார். அரசின் கடமை மக்களுக்கு உதவி செய்வதுதான்

முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம்- கடம்பூர் ராஜூ ஆவேசம்

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூபாய் 2500யை முதல்வர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதிலும் அரசியல் சாயம் பூசினால் அது அவர்களின் விருப்பம். மக்கள் பயன்பாட்டிற்காக பொங்கல் பரிசினை முதல்வர் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அவரால் தேர்தல் நேரத்தில் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தடம் பதித்ததும் இல்லை,‌ இனி பதிக்க போவதுமில்லை. நடிகர் கமல்ஹாசன் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். அதற்கு தான் அவருக்கு நாங்கள் பதில் கூறி வருகிறோமே தவிர அவரை பொருட்டாக நினைத்து பதில் கூறவில்லை

நடிகர் கமல்ஹாசன் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தவறான கருத்துக்களை தெரிவித்தால் அமைச்சர் மட்டுமல்ல, அதிமுகவின் சாதாரண தொண்டருடன் பதிலடி கொடுப்பார்கள். தவறான பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடாது, ‌ இருந்தாலும் தேர்தல் நேரம் என்பதால் மக்களுக்கு விளக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே நடிகர் கமல்ஹாசன் மட்டுமல்ல யாரு தவறான கருத்து கூறினாலும் அதற்கு பதிலடி கொடுப்போம்” என்றார்.