“கமல் எவ்வளவு சம்பளம் வாங்கினார், எவ்வளவு வருமான வரி கட்டினார் என வெள்ளை அறிக்கை விட தயாரா?”

 

“கமல் எவ்வளவு சம்பளம் வாங்கினார், எவ்வளவு வருமான வரி கட்டினார் என வெள்ளை அறிக்கை விட தயாரா?”

திரைப்படங்களில் நடிக்க கமல் எவ்வளவு ஊதியம் வாங்கினார், ‌ எவ்வளவு வருமான வரி கட்டினார் என்று வெள்ளை அறிக்கை விட தயாரா ? என அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, “ திரையரங்குகளில் 100 சதவீதம் மக்களை அனுமதிக்க திரையரங்கு உரிமையாளர்கள் இதுவரை அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. 50சதவீத இருக்கைகளுடன் திரையரங்கில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்ட போதிலும், அதற்கு கூட மக்கள் கூட்டம் வரவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். 50சதவீத இருக்கைகளை தாண்டி மக்கள் கூட்டம் வரும் போது, திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தால் அதனை அரசு பரிசீலிக்கும். திரையரங்குகளுக்கு வசூலிக்கப்பட்ட 30சதவீத கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைந்தது இந்த அரசு தான். 8 சதவீத கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி இருப்பதால் கலந்து ஆலோசித்து விட்டு கூறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

“கமல் எவ்வளவு சம்பளம் வாங்கினார், எவ்வளவு வருமான வரி கட்டினார் என வெள்ளை அறிக்கை விட தயாரா?”

அரசு வழியில் தான் அரசு அதிகாரிகளும் செல்வார்கள். வானத்தில் இருந்து குதித்தவர் போன்று நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் எத்தனை படத்தில் நடித்து உள்ளார். ஒளிவு மறைவு இல்லாமல் எவ்வளவு ஊதியம் வாங்கினார். எவ்வளவு வருமான வரி கட்டினார் என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? அதன் பின்னர் மற்றவர்களை பற்றி அவர் பேசட்டும். முதல்வராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் நாங்கள் தான் எம்ஜிஆர் ரசிகர்கள்.

எம்ஜிஆர் நடிகராக இருந்தபோது முதல், அவர் அதிமுகவை தொடங்கியது முதல் நாங்கள் இருக்கிறோம். எனவே நாங்கள் தான் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட முடியும். வேறு யாருக்கும் அவரை சொந்தம் கொண்டாட தார்மீக உரிமை கிடையாது. தார்மீக உரிமை இல்லாமல் சொந்தம் கொண்டாடினால் அதற்கு பெயர் வேறு. அதனை நான் சொன்னால் நாகரிகமாக இருக்காது. மக்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அரசு உத்தரவிட்டுள்ளது” எனக் கூறினார்.