“7 பேர் விடுதலை விவகாரம்: திமுக காங்கிரஸ் கூட்டணி முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது”

 

“7 பேர் விடுதலை விவகாரம்: திமுக காங்கிரஸ் கூட்டணி முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது”

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இடையே முரண்பாடு உள்ளது. இதன் மூலம் முரண்பாடு உள்ள கூட்டணி என்பது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அரசியலாக பார்க்கக் கூடாது. தமிழர்கள் என்ற உணர்வுடன் பார்க்க வேண்டும். அவர்களை ராஜிவ் காந்தி குடும்பத்தினரே மன்னித்துவிட்டனர். 7 பேரையும் விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. இதனை காங்கிரஸ் அரசியலாக்க எடுப்பது நல்லதல்ல. இது உணர்ச்சிகரமான பிரச்சினை.

“7 பேர் விடுதலை விவகாரம்: திமுக காங்கிரஸ் கூட்டணி முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது”

ஆளுநர் தற்போது டெல்லி சென்றுள்ளார். இது போன்ற விஷயங்களை மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும். நல்ல முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. கூட்டணி ஆட்சிதான் அமையும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என பாஜக தலைவர் முருகன் கூறியிருப்பது அவர்களது விருப்பம். அவர்களது விருப்பத்துக்கும் ஆசைக்கும் யாரும் தடைபோட முடியாது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நேரத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கான தேவை இருக்காது என்ற சூழலில் தான் நாங்கள் தேர்தலை சந்திப்போம். தேர்தல் முடிவும் அப்படித்தான் வரும். அதிமுக ஆட்சி அமையும் என்று கூறியதற்காக பாஜக தலைவர் முருகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மந்திரி சபையில் இணைய வேண்டும் என கேட்டுள்ளார். அதனை அதிமுக தலைமை தான் முடிவு செய்யும்” எனக் கூறினார்.