நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இதுவே காரணம்! அமைச்சர் கடம்பூர் செல்லூர் ராஜூ

 

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இதுவே காரணம்! அமைச்சர் கடம்பூர் செல்லூர் ராஜூ

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்த விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறார். விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் ஆலோசனை நடத்திவருவது அரசியலுக்கான ஆயத்தமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இதுவே காரணம்! அமைச்சர் கடம்பூர் செல்லூர் ராஜூ

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “ திருமாவளன் மட்டுமல்ல யாராக இருந்தாலும், யாரை பற்றியும் இழிவாகவோ மனது புண்படும்படும் படியோ பேசினால் தவறு தான்திருமாவளவன் தனது கருத்தினை திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்னவாகும் என்ற ஆராய்ச்சிக்கு போக வேண்டிய தேவை இல்லை. முன்னணி நடிகர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பது வழக்கம். எந்த நோக்கத்திற்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளை பார்த்தேன் என்று நடிகர் விஜய் சொன்னால் அதற்கு பதில் சொல்ல முடியும். ஆண்டுக்கு இரண்டு முறை நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது வழக்கம் அந்த முறையில் சந்தித்து இருக்கலாம். விஜய் மன்ற நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. விஜய் சந்திப்பில் அரசியல் என்ற வார்த்தையே வரவில்லை. இல்லாத ஒன்றை பற்றி நாம் பேசுவது சரியாக இருக்காது

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இதுவே காரணம்! அமைச்சர் கடம்பூர் செல்லூர் ராஜூ

திரையரங்குகள் உரிமம் புதுப்பிக்கும் காலத்தினை 3 ஆண்டு என்று உயர்த்தியதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். வரும் 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சியில் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார். வரும் ஒன்றாம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் போது அதில் ஒரு அம்சமாக திரையரங்குள் திறப்பு பற்றிய ஆலோசனையும் இடம் பெறும்” எனக் கூறினார்.