சமூகப் பரவல் – மக்கள் கையில்தான் உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

சமூகப் பரவல் – மக்கள் கையில்தான் உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “நடிகர் கமலஹாசன் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக செல்வார். ஊரடங்கு நேத்தில் கருத்துக்கள் யாறூம் சொல்லுவதில் தவறு இல்லை. நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும், தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், வீட்டில் இருக்க வேண்டும், விலகி இருக்க வேண்டும் என்று தான் உலக சுகாதார நிறுவனம், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மக்களுக்கு கூறி வருகின்றன. இதை தான் நடிகர் கமலஹாசனும் கூறியுள்ளார். அனைவரும் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கின்றனர்.

சமூகப் பரவல் – மக்கள் கையில்தான் உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
சமூக பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில் தான் உள்ளது. அரசு ஊரடங்கினை அமுல்படுத்தலாம், அத்தியாவசிய அவசியம் கருதி சில தளர்வுகளை தரலாம். தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மக்களிடம் உரையாற்றி கொரோனா விழிப்புணர்வு குறித்து அறிவுறுத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு தான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தவிர தூத்துக்குடி மாவட்ட மக்கள் யாருக்கும் இல்ல” என தெரிவித்தார்.