திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக உள்ளன: அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக உள்ளன: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்த படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக கூட்டணி உடைவது மட்டுமல்ல சிதறிவிடும், அங்கு ஒத்த கருத்து உள்ள கட்சிகள் இல்லை. கூட்டணி தர்மத்தினை கடைபிடிக்கும் ஒரே கட்சி அதிமுக கூட்டணி தர்மத்தின் படி பா.ம.க அன்புமணிராமதாஸ், த.மா.க ஜி.கே.வாசனுக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிக்கான இடங்கள் அதிமுக ஒதுக்கி தந்தது. கூட்டணி கட்சிகளை மிதிக்கும் கட்சி திமுக. கூட்டணி அமையும் போது தமிழகம் பல்வேறு காட்சிகளை பார்க்க உள்ளது. திமுகவில் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக உள்ளனர். அது நிச்சயமாக நடக்கும்

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக உள்ளன: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆபாச படத்திற்கு (இருட்டு அறையில் முரட்டு குத்து -2) ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார் சென்சார் போர்டு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தும் தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்த காட்சிகளாக இருந்தாலும், திரைப்படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும்

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்த படம் வந்தாலும்,யாருடைய படமாக இருந்தாலும் அதனை தடுக்கும் வகையில் அரசு முழுகவனத்துடன் சென்சார் போர்டு மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும். அதிமுக கூட்டணி அமைக்கும் போது எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்பட்டனர். அது போல தான் தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தங்குகிறது” என்றார்.