திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சி விலையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் , “தமிழகத்தில் கொரானா கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் முன்னோடியாக மார்ச் 23ம் தேதி முதலே ஊரடங்கு தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் நேரடியாக களப்பணியாற்றி கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறார். கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக முதல்வருக்கு காணொலி கான்பரன்ஸ் கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டம் கொரானா பாதிப்பில் குறைவான இடத்தை பிடித்துள்ளது. இங்கு இறப்பு விகிதமும் 0.67 சதவீதமாக குறைந்த அளவிலேயே உள்ளது.

திரையரங்குகளில் பொதுமக்கள் 2 முதல் 3 மணி நேரம் இருக்க வேண்டியது வரும் அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் திரையரங்குகளை திறக்க காலம் தள்ளி போகிறது. அதே வேளையில் திரைப்பட தொழிலாளர் பாதிப்படையாமல் இருக்க நல வாரியம் மூலம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்பட தயாரிப்பு பணிகள் 75 பேர்களை வைத்து நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர சின்னத்திரை படப்பிடிப்பகளும் குறைந்த அளவிலான நபர்களை வைத்து நடத்த அனுமதிக்கப்பட்;டு நடந்து வருகிறது. தேர்தல் கூட்டணிக்குறித்து தலைமை மற்றும் பொதுக்குழு முடிவு செய்யும். செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.