தியேட்டரை திறப்பது மட்டும்தான் நாங்க! படங்கள் வெளியிடுவதலாம் எங்களுக்கு தெரியாது- கடம்பூர் ராஜூ

 

தியேட்டரை திறப்பது மட்டும்தான் நாங்க! படங்கள் வெளியிடுவதலாம் எங்களுக்கு தெரியாது- கடம்பூர் ராஜூ

தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான கேயார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

திரையரங்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டால் கூட்டம் கூடுவதை தவிர்க்க பெரிய நடிகர்களின் திரைப்படங்களை வெளியிட கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது பற்றிய கேள்விக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

தியேட்டரை திறப்பது மட்டும்தான் நாங்க! படங்கள் வெளியிடுவதலாம் எங்களுக்கு தெரியாது- கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திரைப்படங்களை வெளியிடுவது பற்றி அரசு முடிவு எடுக்க முடியாது, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது, எந்த தேதியில், எந்த படங்கள் வெளியிடுவது என்பது பற்றி அவர்கள் தான் முடிவு செய்ய முடியும். தயாரிப்பாளர் சங்கத்தினர் தேர்தல் நடைபெறாத காரணத்தினால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். படங்களை வெளியீடு தொடர்பாக அவர்களுக்கு (தயாரிப்பாளர்களுக்குள்) பேசிக்கொள்கிறோம் என்றால் அரசு தலையீடாது, அதே நேரத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அரசு தலையீட்டு நடவடிக்கை எடுக்கும், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

தனியார் கருத்து கணிப்பில் செல்வாக்கு இல்லாத முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் இடம் பெற்றுள்ளது பற்றிய கேள்விக்கு, இந்திய டூடே 2 முறை தமிழகத்திற்கு சிறந்த நிர்வாகத்திற்கு விருது வழங்கியது. இதை தமிழக மக்கள் தங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைத்தார்கள். இதை அனைத்து ஊடகங்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் வரவேற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும், தனியார் கருத்து கணிப்புகளை கணக்கில் எடுத்து கொள்வது சரியாக இருக்காது” என்றார்.