கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘புது வித பிரச்சாரம்’!

 

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘புது வித பிரச்சாரம்’!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் வாக்குகளை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. குறிப்பாக தங்களது தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘புது வித பிரச்சாரம்’!

நிலவுக்கு டூர், விண்வெளி ஆராய்ச்சி மையம், நீச்சல் குளத்துடன் வீடு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவிட்ட மதுரை சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆகிவிட்டார். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தேர்தல் வாக்குறுதிகள். அதிமுக, திமுக ஆகிய மாபெரும் கட்சிகளின் தேர்தல் அறிவிப்புகள் இன்றளவும் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படுகிறது.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘புது வித பிரச்சாரம்’!

இந்த நிலையில், கோவில்பட்டி தொகுதியில் 3ஆவது முறையாக களம் காணும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுகவின் வாக்குறுதிகளை மாடல் படங்களாக அச்சிட்டு பொதுமக்கள் மத்தியில் காட்டி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். இலவச வாஷிங் மெஷின், இலவச சிலிண்டர், பேருந்தில் மகளிருக்கு சலுகை போன்ற வாக்குறுதிகளை எடுத்துரைக்கும் விதமாக படங்கள் அதில் அச்சிடப்பட்டுள்ளது. அமைச்சர் கடம்பூர் ராஜூவின் இந்த புது வித பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.