‘தேர்தல் நெருக்கத்தில் திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது’ அமைச்சர் தடாலடி!

‘தேர்தல் நெருக்கத்தில் திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது’ அமைச்சர் தடாலடி!

திமுக கூட்டணியில் இருந்து எல்லா கட்சிகளும் விலகி விடும் என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், கட்சிகளுக்கிடையே தற்போது வழக்கம் போல கூட்டணி பிரச்னை நிலவி வருகிறது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கும் அதே வேளையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது. மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் கட்சி மாறலாம் என கூறப்படுகிறது.

‘தேர்தல் நெருக்கத்தில் திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது’ அமைச்சர் தடாலடி!

இதனிடையே, அதிமுக தான் அரியணையில் ஏறும் என அமைச்சர்களும், 6 மாதத்தில் விடியல் பிறந்து ஆட்சி மாறும் என முக ஸ்டாலின் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து எல்லா கட்சிகளும் விலகும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘தேர்தல் நெருக்கத்தில் திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது’ அமைச்சர் தடாலடி!

அப்போது பேசிய அவர், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாகவும் அரசியல், கட்சி பணிகளை ஆன்லைன் மூலம் செய்யும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அதிமுக சுயமாக இயங்கக்கூடியது என்றும் சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து அரசியல் செய்கிறது திமுக என்றும் தெரிவித்தார்.