இரட்டை வேடம் போடுவது திமுக தான் : அமைச்சர் விமர்சனம்!

 

இரட்டை வேடம் போடுவது திமுக தான் : அமைச்சர் விமர்சனம்!

சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. தமிழக அரசியல் களமே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இரட்டை வேடம் போடுவது திமுக தான் : அமைச்சர் விமர்சனம்!

அதிமுகவுக்கு எதிராக திமுக முன்வைக்கும் அனைத்து கருத்துக்களுக்கும் அதிமுக பிரமுகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போதும், ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிரடியாக பேசி வருகிறார். இதனிடையே, திமுகவின் விமர்சனங்கள் குறித்து அமைச்சர்களும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில், தேர்தலுக்காக திமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். ஒரே நிலைப்பாட்டில் இருப்பது அதிமுக தான் என்றும் கிராம சபை கூட்டம் தோல்வியடைந்ததால் திமுகவினர் தொகுதிவாரியாக தேர்தல் பரப்புரைக்கு செல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.