“எனக்கு பெட்டிக்கடை கூட இல்லை; தினகரனால் 25 ஆயிரம் ஓட்டுகள் கூடி விட்டது”

 

“எனக்கு பெட்டிக்கடை கூட இல்லை; தினகரனால் 25 ஆயிரம் ஓட்டுகள் கூடி விட்டது”

அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர் , “எனக்கு சிங்கப்பூர் மலேசியாவில் ஹோட்டல்கள் உள்ளதாக அமமுக தென் மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா கூறி வருகிறார். இது முற்றிலும் தவறான தகவல். இதனால் எனது இமேஜ் பாதிக்கப்படுகிறது. மாணிக்கராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன். சிங்கப்பூருக்கு இதுவரை நான் போனதே இல்லை ;மலேசியாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் ;மலேசியா, சிங்கப்பூரில் இரண்டு நாடுகளிலும் எனக்கு ஒரு பெட்டிக்கடை கூட இல்லை. அப்படி இருப்பதாக நிரூபித்தால் நான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக உள்ளேன் “என்றார்.

“எனக்கு பெட்டிக்கடை கூட இல்லை; தினகரனால் 25 ஆயிரம் ஓட்டுகள் கூடி விட்டது”

தொடர்ந்து பேசிய அவர், “டிடிவி தினகரனுக்குத்தான் சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவது தொடர்பான வழக்கு உள்ளது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.நான் தமிழகத்தில் இருக்கமாட்டேன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறிய தினகரன் தான் தற்போது கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றுவிட்டால் ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் கூட நாம் சிங்கப்பூருக்கு தான் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

“எனக்கு பெட்டிக்கடை கூட இல்லை; தினகரனால் 25 ஆயிரம் ஓட்டுகள் கூடி விட்டது”

“திமுகவைப் பொறுத்தவரை அது குடும்ப ஆட்சி .ஆனால் திமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். கருத்துக்கணிப்புகள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று வருகிறது. எனது கார் முன்பு பட்டாசு வெடித்த விவகாரத்தினால் 25 ஆயிரம் வாக்குகள் எனக்கு கூடி விட்டது .அதனால் நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். என்னை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்” என்றார்