மாஸ்க் போடவில்லை என்றால் மீன் மார்க்கெட்டில் அனுமதிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை காசிமேட்டில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை நடைபெறாது என்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம், தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டது, இந்த நிலையில், சென்னை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். காசிமேடு உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலுடன் மீன் கடைகளை அமைப்பது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாஸ்க் அணியாமல் மீன் மார்க்கெட்டுக்கு வருபவர்களை அனுமதிக்க கூடாது என்றும் காசிமேட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு தற்போது அனுமதி கிடையாது என்றும் கூறினார். மேலும், மீன் மார்க்கெட்டுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல தனியாக பாதை அமைக்க வேண்டும் என்று கூறிய அவர் மீன் போன்ற அழுகக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல பாஸ் தேவை இல்லை என்றும் கூறினார்.

Most Popular

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

இன்னும் 8 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல்...

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!

கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை நிறுவ, ஊர்வலம் நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பா.ஜ.க, இந்து அமைப்புகள்...

குப்பையில் கிடந்த பணம், நகைகள்… சேமித்து வைத்த மூதாட்டிகள்!- உதவி கரம் நீட்டிய சென்னை போலீஸ்

சொந்த வீட்டில் குப்பைகளோடு நகை, பணத்தை சேமித்து வைத்துவிட்டு பிளாட்பாரத்தில் வாழ்ந்த மூதாட்டிகளுக்கு சென்னை காவல்துறையினர் உதவி செய்ததோடு, சொந்த வீட்டில் வாழ வைத்துள்ளனர். சென்னை, ஓட்டேரி சத்யவாணி முத்துநகரில் மூன்று மாடிகள் கொண்ட...

‘அடுத்த முதல்வர் ஒபிஎஸ் தான்’ என ஓட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. தேனியில் பரபரப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. இதற்கு கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், அதிமுகவில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. அதாவது அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?. சமீப...
Do NOT follow this link or you will be banned from the site!