வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர்!

 

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு, பாஜகவை விட குறைவான தொகுதிகளை கொடுக்க அதிமுக தலைமை முன்வந்தது தேமுதிகவினரை கொதித்தெழச் செய்தது.

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர்!

அதனால், தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து பண்ருட்டியில் பேசிய விஜய பிரபாகரன், யாருக்கும் சளைத்தவர்கள் தேமுதிகவினர் அல்ல. அதிமுக தலைமை சரியில்லை. எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக மண்ணைக் கவ்வும். அதிமுகவுக்கு இனி இறங்கு முகம் தான் என கடுமையாக விமர்சித்திருந்தார். கட்சியில் இருந்து வெளியேறிய உடனேயே விஜய பிரபாகரன் இவ்வாறு பேசியது, அதிமுக தொண்டர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர்!

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கு பாதிப்பில்லை. பாதிப்புக்கு தேமுதிகவுக்கு தான். தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. வார்த்தைகளை அளந்து பேசுங்கள். இல்லையெனில் அதற்கு உரிய பதிலடியை அதிமுக கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர்!

இதையடுத்து அதிமுகவை பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றை வாரி இறைப்பதா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், கீழ்த்தரமான அரசியலை தேமுதிக முன்னெடுத்தால் அதிமுக பதிலடி கொடுக்கும் என்றும் எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் ஆவேசமாக பேசினார்.