“வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி” – ஜெயக்குமார் உருக்கம்!

 

“வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி” – ஜெயக்குமார் உருக்கம்!

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது. 75 தொகுதிகளில் அதிமுக ஜெயித்து பலம் வாய்ந்த எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மிகப்பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக 11 அமைச்சர்கள் படுதோல்வியடைந்துள்ளனர்.

“வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி” – ஜெயக்குமார் உருக்கம்!

ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன், கே.சி. வீரமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றனர். இதில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியடைந்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. திமுக சார்பில் களமிறக்கப்பட்ட திரையரங்கு உரிமையாளர் ஐட்ரீம் மூர்த்தி ராயபுரம் தொகுதிக்குப் புதுமுகம். முதல் முறையாகத் தேர்தலில் களமிறங்கினார். ஆனால் ஜெயக்குமாரின் 25 ஆண்டு கால அரசியலுக்கு வேகத்தடை போட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

“வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி” – ஜெயக்குமார் உருக்கம்!

தபால் வாக்குகளிலிருந்தே முன்னிலையில் இருந்த மூர்த்தி, ஜெயக்குமாரை முன்னே வரவே விடவில்லை. மதியத்திற்குப் பிறகு நிலைமை மாறும் என்று நினைத்த ஜெயக்குமாருக்குப் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஏமாற்றம் கடைசி வரை நிகழ்ந்தது தான் பரிதாபத்தின் உச்சம். இறுதிச் சுற்று முடிவில் ஜெயக்குமார் சுமார் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைப் பரிசாகப் பெற்றுக்கொண்டார். தொகுதி மக்களிடையே நற்பெயரை சம்பாதிக்காமல் விட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கூடவே தொகுதிக்கு நல்ல திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை என்ற அதிருப்தியும் சேர்ந்து அவரின் வெற்றிவாய்ப்பை மங்கச் செய்திருக்கின்றன.

இச்சூழலில் தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஜெயக்குமார். அவரது ட்வீட்டில், “வெற்றியோ,தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.. உங்களுடனேயே பயணிப்பேன் வாக்களித்த,வாக்களிக்காத இராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! நான் எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும்.நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.