அதிமுக தொண்டர்களை சீண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

அதிமுக தொண்டர்களை சீண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 14 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே போல சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாகவும் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை எனவும் முதல்வர் தெரிவித்து வருகிறார்.

அதிமுக தொண்டர்களை சீண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இந்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து விரைவில் சமநிலையை எட்டுவோம் என்றும் காய்ச்சல் முகாம்கள் மூலம் கொரோனா பாதிப்புகளை அதிகளவு கண்டறிய முடிந்ததாகவும் கொரோனா பாதிப்பு சங்கிலி உடைக்கப்பட்டதால் சமூக பரவலாக இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து, உதயநிதி இ பாஸ் எடுத்தாரா என்பதற்கு இப்போது வரை ஆதாரம் இல்லை என்று கூறிய அவர், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எண்ணம் என்றும் கூறினார்.

மேலும், கடமையும் உரிமையும் உள்ள தாங்கள் தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளோம் என்றும் எம்ஜிஆர் சிலை அவமதிப்பு கண்டனத்திற்குரியதாகவும் அதிமுக தொண்டர்களை சீண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறினார்.