“நயன்தாரா மேட்டர்ல ராதாரவிக்கு ஒரு நியாயம்? ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா?” – ஸ்டாலின் ஜெயிக்க அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!

“நயன்தாரா மேட்டர்ல ராதாரவிக்கு ஒரு நியாயம்? ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா?” – ஸ்டாலின் ஜெயிக்க அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!

அரசியல் பெரிய பூதாகரமாக வெடித்தது முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தான். இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொந்தளித்த அதிமுகவினர் ராசாவின் உருவபொம்மையை எரித்தும் செருப்பால் அடித்தும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். பிரச்சாரத்தில் முதல்வரும் ராசாவை கடவுள் தண்டிப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார். தொடர்ந்து ராசா உளப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

“நயன்தாரா மேட்டர்ல ராதாரவிக்கு ஒரு நியாயம்? ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா?” – ஸ்டாலின் ஜெயிக்க அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!

ஆனால் மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பது போல அதிமுகவினர் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களின் தேர்தல் வியூகமாக இருக்கக் கூடும். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால்தான் தன் பேச்சுக்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர்கள் கட்சியில் எல்லோரும் அப்படித்தான். நிலச்சுவான்தாரர், பண்ணையார், ஜமீன்தார் போன்றுதான் அவர்கள் அரசியல் நடத்துகின்றனர். மக்கள் அரசியலை திமுக முன்னெடுக்கவில்லை.

“நயன்தாரா மேட்டர்ல ராதாரவிக்கு ஒரு நியாயம்? ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா?” – ஸ்டாலின் ஜெயிக்க அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!

ராதாரவிக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா? ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால்தான் திமுக மீது மக்களுக்கு நல்ல கருத்து இருக்கும். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், திமுக சொல்லித்தான் ஆ.ராசா பேசினார் என்ற கருத்து இருக்கும். தான் பேசியதைத் திரித்து சமூக வலைதளங்களில் உலாவிட்டிருந்தால் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லையே? அப்போது பேசியது உண்மைதானே?” என்றார்.

2019ஆம் ஆண்டு கொலையுதிர் காலம் பிரஸ் மீட்டில் நயன்தாரா குறித்து ராதாரவி இழிவாகப் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக வேட்பாள்ர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகிறார்.