“அமமுக குள்ள நரிக் கூட்டம்; அதிமுக சிங்கங்கள்” : அமைச்சர் ஜெயக்குமார்

 

“அமமுக குள்ள நரிக் கூட்டம்; அதிமுக சிங்கங்கள்” : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவுடன் அமமுகவை இணைக்க வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிலிருந்து எழுச்சி இப்போதும் காணமுடிகிறது.தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.விருப்பமனு பெற இறுதி நாள் என்பதால் கட்சி நிர்வாகிகள் அதிகளவில் இங்கு கூடியுள்ளனர். இதிலிருந்து ஒரு கட்சி எவ்வளவு எழுச்சியாக உள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது” என்றார்.

“அமமுக குள்ள நரிக் கூட்டம்; அதிமுக சிங்கங்கள்” : அமைச்சர் ஜெயக்குமார்

தொடர்ந்து பேசிய அவர், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குள்ள நரிக் கூட்டம். அதிமுக சிங்கங்கள் என்பதால் அமமுகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுகவுடன் அமமுகவை இணைக்க வாய்ப்பே இல்லை. அதிமுகவில் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு கிடையாது ” என்றார்.

“அமமுக குள்ள நரிக் கூட்டம்; அதிமுக சிங்கங்கள்” : அமைச்சர் ஜெயக்குமார்

முன்னதாக சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுக தான் முடிவு எடுக்க வேண்டும். சசிகலா, தினகரனின் அரசியல் பலம் மற்றும் பலவீனம் பற்றி ஓபிஎஸ் – ஈபிஎஸுக்கு நன்றாக தெரியும். இரண்டு பேரையும் சேர்ப்பது பற்றி அதிமுக தான் முடிவெடுக்க வேண்டும். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் ” என்றார்