தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடா? ஒரு கருவியின் விலை இதுதான்! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடா? ஒரு கருவியின் விலை இதுதான்! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், விலை அதிகம் கொடுத்து வாங்கியதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு சென்னை மாநகராட்சி வெளியிட்ட பதில் அறிக்கையில், “சென்னை மாநகராட்சியால் வெப்ப மானியை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ரூ.1,765 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் கொள்முதல் செய்யப்பட்ட பத்தாயிரம் வெப்ப மானிகளின் மொத்த விலையானது (வரிகள் உட்பட) ரூ.2.08 கோடி ஆகும். தெர்மல் ஸ்கேனர் இந்திய நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டது” என விளக்கமளித்தது.

தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடா? ஒரு கருவியின் விலை இதுதான்! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

இந்நிலையில் செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது ஸ்டாலின் பழி போடுகிறார். தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தலா ரூ.1,765+18% ஜிஎஸ்டி வரியுடன் மட்டுமே வாங்கப்பட்டது” என விளக்கமளித்துள்ளார்.