‘சென்னையில் 13 இடங்களில் தான் நீர் தேக்கம்’ – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

‘சென்னையில் 13 இடங்களில் தான் நீர் தேக்கம்’ – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக, 13 இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

‘சென்னையில் 13 இடங்களில் தான் நீர் தேக்கம்’ – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் அண்ணா சாலை, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதனையடுத்து, மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

‘சென்னையில் 13 இடங்களில் தான் நீர் தேக்கம்’ – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘சென்னையில் 13 இடங்களில் தான் மழை நீர் தேங்கியுள்ளது. 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன’ என்று கூறினார். மேலும், 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார்.