‘ராஜேந்திர பாலாஜி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’ – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

 

‘ராஜேந்திர பாலாஜி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’ – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாதி மதம் பாராமல் எல்லாரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அரசு வழங்கிய ரூ.2,500 பரிசுக்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சசிகலாவை ஒரு போதும் அதிமுக ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்.

‘ராஜேந்திர பாலாஜி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’ – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

தொடர்ந்து அமமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நிலவும் பிரச்னை அண்ணன் தம்பி பிரச்னை என்று கூறிய ராஜேந்திர பாலாஜியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காட்டமாக தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்ற அமமுகவுடன் அதிமுக அண்ணன் தம்பியாக இருக்க முடியாது என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தான் அதிமுக என்றும் கூறினார். தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை, ஒரு சென்ட் நிலம் கூட கொடுத்ததில்லை என விமர்சித்தார்.

மேலும், 2ஜி வழக்கில் திமுக சுருட்டிய பணத்தை நாட்டுடைமையாக்கினால் தமிழ்நாட்டின் கடன் பிரச்னை மொத்தம் தீர்ந்து விடும் என்றும் அதிமுக – பாமக இடையே பிரச்னை ஏதும் இல்லை, தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.