திமுக கூட்டணி கட்சிகள் பல அதிமுக கூட்டணிக்கு வரலாம் – அமைச்சர் ஜெயக்குமார்

 

திமுக கூட்டணி கட்சிகள் பல  அதிமுக கூட்டணிக்கு வரலாம் – அமைச்சர் ஜெயக்குமார்

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தை ஆண்ட பிரதான கட்சிகளான அதிமுக முன்னாள் தலைவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகும் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், இத்தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், திமுவுடன் காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது.

திமுக கூட்டணி கட்சிகள் பல  அதிமுக கூட்டணிக்கு வரலாம் – அமைச்சர் ஜெயக்குமார்

இதனிடையே திமுகவுடன் இருக்கும் பிற கூட்டணி கட்சிகள் கட்சியின் தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு வரலாம் என தெரிவித்தார். மேலும், சசிகலா வருகை எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.