பிக்பாஸ் போல 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

 

பிக்பாஸ் போல 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

கொரோனாவுக்கு பயந்து கமல்ஹாசன் 100 நாட்கள் வீட்டுக்குளேயே இருந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் குற்றஞ்சாட்டி வருகிறார். மு.க ஸ்டாலின் மட்டுமில்லாமல் கமல்ஹாசன் உள்ளிட்டோர் அவ்வப்போது அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்தில் கட்சிகளுக்கு இடையே அறிக்கை போர் நடந்தது என்றே சொல்லலாம்.

பிக்பாஸ் போல 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இந்த நிலையில் கொரோனாவுக்கு பயந்து கமல்ஹாசன் வீட்டுக்குளேயே இருந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் கமல்ஹாசன் உள்ளேயே இருந்ததாகவும் அறிக்கை மூலம் மட்டுமே பேசும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ் சீசனுக்கு தயாராகி விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், மத்தியில் 17 ஆண்டு கூட்டணியில் இருந்த திமுக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.