“கலைஞர் டிவி நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு” – அமைச்சர் ஜெயக்குமார்

 

“கலைஞர் டிவி நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு” – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை புரசைவாக்கத்தில், நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ துரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால் சட்டப்பேரவைக்குள் வரமுடியாது. இல்லதரசிகள் அதிமுக கொடுத்த மிக்சி, கிரைண்டரை பயன்படுத்திவருகின்றனர்.

ஆனால் திமுக ஆட்சியில் கொடுத்த டிவி நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் ரூபாய் பரிசாக தருகிறேன். மாநிலத்தின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். தமிழகம் முழுவதுமல்ல இந்தியா முழுவதுமுள்ள மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு நல்லது செய்யும் ஆட்சி அதிமுக. தாலிக்கு தங்கம் திட்டத்தில் இதுவரை பயனாளிகளுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 டன் தங்கம் தரப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் சென்னைக்கு மட்டும் ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

“கலைஞர் டிவி நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு” – அமைச்சர் ஜெயக்குமார்

முன்னதாக இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவரும்போது துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கத்தி கூச்சல் போட்டு வெளிநடப்பு செய்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சியிலிருந்து இறங்கும்போது தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நிதியமைச்சர் எங்கள் ஆட்சியின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி என்று சொல்கிறாரென்றால், ஆட்சி செய்ய அருகதையற்ற அரசு என துரைமுருகன் விலாசினார் என்பது குறிப்பிடதக்கது.