கமல் முதலில் தனியாக நிற்பேன் என்றார் தற்போது ஆள்பிடித்துக்கொண்டிருக்கிறார்- அமைச்சர் ஜெயக்குமார்

கமல் முதலில் தனியாக நிற்பேன் என்றார் தற்போது ஆள்பிடித்துக்கொண்டிருக்கிறார்- அமைச்சர் ஜெயக்குமார்

ஈகோவை விட்டுக் கொடுத்து, ரஜினியுடன் கூட்டணி சேர தயார் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். ஒரு வருடத்துக்கு முன்னதாகவே ரஜினியுடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கமலஹாசன் கூறியிருந்தார்.

கமல் முதலில் தனியாக நிற்பேன் என்றார் தற்போது ஆள்பிடித்துக்கொண்டிருக்கிறார்- அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கமல் முதலில் தனியாக நிற்பேன் என்றார் தற்போது ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். ஈகோவை விடுத்து ரஜினியுடன் இணைய தயார் எனக் கூறுகிறார். எம்.ஜி.ஆர் மீது உண்மையில் கமலுக்கு பக்தி இருக்குமேயானால் அவரை புரட்சித் தலைவர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும். இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் வேறுயாருக்கும் போடாது. எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது. எம்.ஜி.ஆர். 10 கோடி தமிழர்களுக்கும் சொந்தம்.

எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியது அதிமுக. கமல் மூன்றாவது அணியல்ல; நான்காவது அணி அமைத்தாலும் அது பிணியாகத்தான் போகும். பச்சோந்தியை போல் செல்லுமிடமெல்லாம் நிறத்தை மாற்றிக்கொள்ளும் மனிதர்களாக திமுகவினர் உள்ளனர்” எனக் கூறினார்.