அதிமுக எம்.எல்.ஏக்களை வர சொன்னதில் விஷேசம் ஏதுமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

 

அதிமுக எம்.எல்.ஏக்களை வர சொன்னதில் விஷேசம் ஏதுமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

வரும் 6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை வர கட்சி தலைமை உத்தரவிட்டதில் ஊர்ஜிதம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், எந்த கட்சி வெற்றி பெரும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இப்படியிருக்க, அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. அதனை இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் இணைந்து அறிவிக்க உள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏக்களை வர சொன்னதில் விஷேசம் ஏதுமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

அதனால் வரும் 6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன், கூவாத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடத்திய கூத்து அனைவரும் அறிந்தவையே. தற்போது மீண்டும் அது போன்ற அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் தம்மை எந்த இடத்தில் தங்க வைப்பார்கள்? இந்த முறை எத்தனை நாட்கள் ஆகும்? என எம்.எல்.ஏக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களாம்.

அதிமுக எம்.எல்.ஏக்களை வர சொன்னதில் விஷேசம் ஏதுமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏக்களை கட்சி அலுவலகம் வர சொல்லக்கூடியதில் எந்த ஒரு விஷேசமும் இல்லை என்றும் 6-ம் தேதி அவசரமாக சென்னை வரச் சொன்னதாக வெளியாகியுள்ள தகவலில் ஊர்ஜிதம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தனக்கே தகவல் இன்னும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.