பீலா ராஜேஷ் மாற்றத்தில் பின்னணி காரணம் எதுவும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

 

பீலா ராஜேஷ் மாற்றத்தில் பின்னணி காரணம் எதுவும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டது வழக்கமான நடவடிக்கைதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பீலா ராஜேஷ் மாற்றத்தில் பின்னணி காரணம் எதுவும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கொரோனா தொடக்க காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியாத அளவுக்கு சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் பிறகு சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணனை நியமித்தார்கள், அதற்கு மேல் மேலும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மேல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆளாளுக்கு தனித்தனியாகப் பேட்டிகள் அளித்து வந்தனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு கருத்தை கூறினால், அதற்கு எதிராக ராதாகிருஷ்ணன் கூறுவார். இதனால் குழப்பமான சூழல் நிலவுகிறது. திடீரென்று பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நிர்வாக நடவடிக்கை காரணமாகவே பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார். அதன் பின்னணியில் வேறு எந்த காரணங்களும் இல்லை. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாது. கொரோனா விவகாரத்தில் யார் அரசியல் செய்தாலும் மக்களால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மக்களை திசை திருப்புவது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கைவந்த கலை. அப்படித்தான் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். சென்னை முழுவதும் எட்டு லட்சம் முதியவர்கள் சிறப்பு கவனத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறார்கள்” என்றார்.