ஈபிஎஸ் மீது அதிருப்தியில் ஆளுநர் : கடமையை செய்கிறோம் என கெத்து காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்

ஈபிஎஸ் மீது அதிருப்தியில் ஆளுநர் : கடமையை செய்கிறோம் என கெத்து காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்

துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து கலையரசன் குழு விசாரிப்பது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இதற்கான விசாரணையும் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈபிஎஸ் மீது அதிருப்தியில் ஆளுநர் : கடமையை செய்கிறோம் என கெத்து காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்

இந்த விவகாரத்தில் தற்போது தலையிட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை . துணைவேந்தரை விசாரிப்பதற்கான குழுவை தனக்கு தெரியாமல் அமைத்தது குறித்தும் விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது.

ஈபிஎஸ் மீது அதிருப்தியில் ஆளுநர் : கடமையை செய்கிறோம் என கெத்து காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில்சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், சூரப்பா மீதான விசாரணை குறித்து ஆளுநர் அதிருப்தி தெரிவித்ததாக வந்த செய்தி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “துணைவேந்தர்கள் சட்டத்திற்குட்பட்டவர்கள் என்பதால் புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பது அரசின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.