தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் : காரணம் இது தான்!

 

தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் : காரணம் இது தான்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வரவிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் கண்டுபிடித்த, கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்து விட்டது. இந்த மருந்துகள் பாதுகாப்பானது என்றும் குழந்தைகளுக்கு கூட செலுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. அதன் படி, இந்தியாவில் விரைவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் : காரணம் இது தான்!

இதனிடையே ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் நடைபெறவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்ததன் படி, நாளை சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கவிருக்கிறது. இதனை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வரவிருப்பதாக இன்று காலை தகவல்கள் கசிந்தன.

தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் : காரணம் இது தான்!

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். நாளை தமிழகம் வரவிருக்கும் ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை ஆய்வு செய்யவிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.