கோழி இறைச்சி, முட்டை மூலம் பறவைக் காய்ச்சல் பரவுமா? – அமைச்சர் விளக்கம்!

கோழி இறைச்சி, முட்டை மூலம் பறவைக் காய்ச்சல் பரவுமா? – அமைச்சர் விளக்கம்!

கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பரவத் தொடங்கிய பறவைக் காய்ச்சல் தற்போது 10 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. பறவைக் காய்ச்சல் மக்களுக்கும் பரவும் தன்மை கொண்டதால், பறவைகளை அழிக்குமாறு உத்தரவிட்ட கேரள அரசு இதனை பேரிடராக அறிவித்தது. கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகளை கொண்டு வர தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை விதித்தன.

கோழி இறைச்சி, முட்டை மூலம் பறவைக் காய்ச்சல் பரவுமா? – அமைச்சர் விளக்கம்!

இவ்வாறு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் டெல்லி, உத்திராகண்ட், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கிறது. பறவைக் காய்ச்சல் பரவல் தற்போது, பறவை இறைச்சி விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால், இறைச்சிகளை வாங்க முற்படாத நிலையில் கோழியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கோழி இறைச்சி, முட்டை மூலம் பறவைக் காய்ச்சல் பரவுமா? – அமைச்சர் விளக்கம்!

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ‘நன்றாக சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிடலாம். கொரோனா பரவாது’ என்று கூறியிருக்கிறார்.