அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 4 ஆக உயர்வு!

 

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 4 ஆக உயர்வு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுகவை சேர்ந்த அமைச்சர் துரைக்கண்ணு நேற்று முதல்நாள் இரவு காலமானார். அவருக்கு வயது 72 . சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மறைவு அதிமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து, அவர் கவனித்து வந்த துறைகள் உயர்கல்வித் துறை கே.பி.அன்பழகனிடம் முதல்வரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 4 ஆக உயர்வு!

இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்ததால், தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 4 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், நியமன உறுப்பரையும் சேர்த்து மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன் ( குடியாத்தம்) , கே.பி.பி.சாமி ( திருவொற்றியூர்), திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் (சேப்பாக்கம்) உள்ளிட்டோர் மரணமடைந்ததை அடுத்து சட்டமன்றத்தில் 3 இடங்கள் காலியானது. தற்போது அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்ததன் மூலம் காலி இடங்கள் 4 ஆக அதிகரித்துள்ளது. வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு காலமானதால் அவரது தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழக சட்டப்பேரவையில் தற்போது அதிமுக – 124, திமுக – 97, காங்கிரஸ் – 7 ,இந்திய யூனியன் முஸ்லீன் லீக் – 1, சுயேட்சை – 1, நியமன உறுப்பினர் – 1 , சபாநாயகர் – 1, காலி இடம் – 4ஆக உள்ளது.