நீட் கொடிய அரக்கன்; மத்திய அரசு பதில் சொல்லும் காலம் நிச்சயம் வரும் – துரைமுருகன் அதிரடி பேச்சு!

 

நீட் கொடிய அரக்கன்; மத்திய அரசு பதில் சொல்லும் காலம் நிச்சயம் வரும் – துரைமுருகன் அதிரடி பேச்சு!

நீட் தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி சௌந்தர்யாவின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 11ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கு முன்தினம் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதிவிட்டு தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தேர்வுக்கு மறுநாள் அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் அதற்கு மறுநாள் வேலூரைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

நீட் கொடிய அரக்கன்; மத்திய அரசு பதில் சொல்லும் காலம் நிச்சயம் வரும் – துரைமுருகன் அதிரடி பேச்சு!

மாணவர்களின் மரணங்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்தன. தயவுசெய்து மாணவர்கள் தங்களது விலைமதிப்பற்ற உயிர்களை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். இது போன்ற துயர சம்பவங்களை தடுப்பதற்கு நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே வழி என அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மாணவி சௌந்தர்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், நீட் தேர்வு என்ற கொடிய அரக்கனை மத்திய அரசு ஏவியுள்ளது. டெல்லியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாண்டனர். அப்போதே எதையும் கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு மாணவர்களின் உயிரைப் பற்றியா அக்கறை கொள்ள போகிறது. இதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க மாட்டார்கள். அவர்கள் பதில் சொல்லும் காலம் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார்.