கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது 90% நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் நேரில் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இந்நிலையில் நெல்லையை சேர்ந்த தால் சரவணன் என்ற நபர், தனது முகநூலில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதன்பின் சில மணி நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். தெரியாமல் தவறுதலாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டதாக சரவணன் விளக்கமளித்துள்ளார்.