அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

 

அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வேளாண்துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதோடு, அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

வேளாண்துறை தொடர்பான நிகழ்ச்சிகளிலும், அதிமுக கட்சிக் கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது.