கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி.. கர்நாடகாவில் மீண்டும் லாக்டவுனா?…. விளக்கம் கொடுத்த அமைச்சர்

கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி.. கர்நாடகாவில் மீண்டும் லாக்டவுனா?…. விளக்கம் கொடுத்த அமைச்சர்

கர்நாடகாவில் மீண்டும் லாக்டவுன் விதிக்கப்படும் வெளியான தகவல் வதந்தி என அம்மாநில மருத்துவ கல்வி துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்தார்.

கர்நாடக மருத்துவ கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: கர்நாடகாவில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தும் எந்த திட்டமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமையன்று சில மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியபோது லாக்டவுனை பரிந்துரைத்தார். ஆனால் அது எந்த மாநிலத்துக்கும் கட்டாயம் இல்லை.

கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி.. கர்நாடகாவில் மீண்டும் லாக்டவுனா?…. விளக்கம் கொடுத்த அமைச்சர்
லாக்டவுன்

அது அவரது தரப்பிலிருந்து உத்தரவாக இல்லாமல் ஆலோசனையாக இருந்தது. மேலும் அதை கர்நாடகாவில் செயல்படுத்த எந்த காரணத்தையும் நான் காணவில்லை. மைக்ரோ-கன்டெய்ன்மென்ட் மண்டலங்களில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்துவது முக்கியமானது. மாநிலத்தில் அல்லது பிற இடங்களிலோ யாரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது அல்லது மக்களை தவறாக வழிநடத்த கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி.. கர்நாடகாவில் மீண்டும் லாக்டவுனா?…. விளக்கம் கொடுத்த அமைச்சர்
பி. நாராயன் ராவ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மனிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி. நாராயன் ராவ் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக காலமானார். நாராயன் ராவ் மறைவுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.