நகரும் நியாய விலைக்கடை சேவையை துவங்கிவைத்த, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

 

நகரும் நியாய விலைக்கடை சேவையை துவங்கிவைத்த, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் சேவையை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நகரும் நியாய விலைக்கடைகள் 24 கூட்டுறவு சங்கங்கள் மூலம், 15 வாகனங்களை கொண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நகரும் நியாய விலைக்கடை சேவையை துவங்கிவைத்த, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள 6 ஆயிரத்து 357 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளதாக கூறிய அமைச்சர் சீனிவாசன், பொதுமக்களுக்கு நியாயமான விலையில், தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இந்த சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், உள்பட ஏராளமானோர் கலந்துகாண்டனர்.