அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்

 

அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்

அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்
அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க சார்பில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமைகளின் கீழ் வராது. எனவே இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு எடுக்க மாட்டோம். மருத்துவப் படிப்புக்காக அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியது. இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அரசியல் கட்சிகள் திரும்பப் பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றன. தி.மு.க, திராவிடர் கழகம், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. சில கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க சார்பில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.