தர்ணாவில் இறங்கிய செல்லூர் ராஜூ : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

 

தர்ணாவில் இறங்கிய செல்லூர் ராஜூ : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

அமைச்சர் செல்லூர் ராஜு வாக்குச்சாவடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்ணாவில் இறங்கிய செல்லூர் ராஜூ : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில் பல இடங்களில் குளறுபடிகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. காலை 9 மணி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.அதேபோல் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகியுள்ள நாமக்கலில் அதிகபட்சமாக 28.33% வாக்குப்பதிவும் , திருநெல்வேலியில் குறைந்தபட்சமாக 20.98% வாக்கும் பதிவாகியுள்ளன. சென்னையை பொறுத்தவரை 23.67% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தர்ணாவில் இறங்கிய செல்லூர் ராஜூ : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர் வாக்கு செலுத்தியதற்கான சிலிப் வராததால் அங்கிருந்த அதிகாரியிடம் இதுகுறித்து முறையிட்டதுடன் அங்கேயே அமர்ந்து கொண்டார். இதையடுத்து மண்டல அதிகாரி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து செல்லூர் ராஜு பதிவிட்ட வாக்கு பதிவாகியுள்ளதா? என்பதை சோதனை செய்து விழுந்துள்ளது என்று உறுதி செய்த பிறகே, அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.இதனால் அங்கு சுமார் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதமானது.