வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் பென்ஜமின்

 

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் பென்ஜமின்

சென்னை

சென்னை மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமினை அமைச்சர் பென்ஜமின் நேரில் ஆய்வுசெய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, சென்னை மதுரவாயில் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பென்ஜமின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் பென்ஜமின்


அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்கும் படி கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.