லாட்டரில சீட்டு விழுவதுபோல எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சது- அமைச்சர் பாஸ்கரன்

 

லாட்டரில சீட்டு விழுவதுபோல எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சது- அமைச்சர் பாஸ்கரன்

தமிழக கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் சமீபத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து பிரபலம் ஆக முயற்சித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக மற்ற அமைச்சர்களைப் போல நான் பந்தா இல்லை, மற்ற அமைச்சர்கள் எல்லாம் பந்தா காட்டுகிறார்கள் என்று அவர் பேசிய வீடியோவும், பா.ஜ.க-வை கழற்றிவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பேட்டியளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ச்சியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டி அளித்து வருகிறார்.

லாட்டரில சீட்டு விழுவதுபோல எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சது- அமைச்சர் பாஸ்கரன்

அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் மேலூரில் புதிய அரிமா சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “நான் ஒரு சாதாரண விவசாயியாக இருந்து அதிமுகவில் கிளை செயலாளராக ஆரம்பித்த தனது அரசியல் பயணம் சேர்மன் வரை கொண்டு சென்றது, ஜெயலலிதாவால் லாட்டரியில் சீட்டு விழுவது போல தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது” என பேசினார்.