மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

 

மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அளித்த கருத்துக்களை தொகுத்து பள்ளிக்கல்வித்துறை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.

மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த பின் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘முதல்வரிடம் அறிக்கை சமர்பித்துளோம். 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்ற கருத்து வெகுவாக எழுந்துள்ளது.குழந்தைகள் பள்ளிக்கு வருவது தான் சரியாக இருக்கும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். 1 முதல் 5 வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு தயக்கம் இருக்கும். மதுரை உயர்நீதி மன்றமும் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு வற்புறுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறது. குழந்தைகளை வற்புறுத்த கூடிய கால கட்டம் இது அல்ல.

மாணவர்களின் உடல்நிலையை காக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எந்த பள்ளிகளும் குழந்தைகளை கட்டாயப்படுத்த வேண்டாம். முதல்வர் ஊரடங்கு முடிவின்போது பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவித்த பின் முறையாக அறிவிப்போம். தமிழகம் முழுவதும் 148 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. பள்ளியில் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானால் கூட பள்ளிகள் மூடப்பட்டு முறையாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.