மத்திய அரசுடன் மோதல்; கண்டனம் தெரிவித்த அன்பில் மகேஷ்

 

மத்திய அரசுடன் மோதல்;  கண்டனம் தெரிவித்த அன்பில் மகேஷ்

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்காததற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது. முன்னதாக தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைக்க தயாராக உள்ளோம். அது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் கல்வித்துறை அதிகாரிகளை மட்டும் மத்திய அரசு ஆழைத்துள்ளதை ஏற்க முடியாது என்றார்.

மத்திய அரசுடன் மோதல்;  கண்டனம் தெரிவித்த அன்பில் மகேஷ்

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கல்வி அமைச்சருக்கு பதிலாக கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை குறித்து ஆலோசிப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே தமிழக அரசு ஆலோசனை புறக்கணித்தது. கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடிக்கும் எண்ணம் இல்லை. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் முதல்வரின் உத்தரவின் படி செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.