அனைவரையும் திருப்தி படுத்தும் வகையில் மதிப்பெண் கணக்கீடு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

 

அனைவரையும் திருப்தி படுத்தும் வகையில் மதிப்பெண் கணக்கீடு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கு மதிப்பெண்கள் மிக அவசியம். பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மதிப்பெண் எப்படி கணக்கீடு செய்யப்படும் என்று கேள்வி வெகுவாக எழுந்தது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு ஒன்றை அமைத்தது.

அனைவரையும் திருப்தி படுத்தும் வகையில் மதிப்பெண் கணக்கீடு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பேரில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் விவரங்களையும் தமிழக அரசு இன்று வெளியிட்டது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 சதவீதம், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 20 சதவீதம், 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30% கொண்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் என்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

இந்த நிலையில், கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் மதிப்பெண் கணக்கிடும் முறை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளார். மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக அமைத்த குழுவின் பரிந்துரையின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மாணவர்கள் கொரோனாவுக்கு முன் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியதால் அதிலிருந்து அதிகபட்சமாக 50% மதிப்பெண் கணக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வி கட்டணம் செலுத்தவில்லை என ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை அனுமதிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.