தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டனர். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகிய நிலையில் பாடத்திட்டங்கள் எதுவும் நடத்தப்படாமல் இருப்பதால், இன்று காலை 2021- 22ம் கல்வி ஆண்டுக்கான பாடநூல் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் ஒளிபரப்பப்படும் தொகுப்பையும் முதல்வர் தொடக்கி வைத்தார். அதன் படி, 2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடங்கள் இன்று முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. அதே போல, நடப்பாண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களும் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தல் குறித்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தால் பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.