அரியர் மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் பதில்!

 

அரியர் மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் பதில்!

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் படி அரியர் விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியதால் இறுதியாண்டை தவிர பிற ஆண்டுகளின் செமஸ்டர் தேர்வை ரத்து செய்த முதல்வர், கட்டணம் செலுத்தி தேர்வெழுத காத்திருந்த அரியர் மாணவர்களின் தேர்வையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் பதில்!

இதனிடையே பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என ஏஐசிடிசி தனக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூர்ப்பா தெரிவித்தார். ஆனால், அரசுக்கு அது போன்ற எந்த கடிதமும் வரவில்லை என்றும் சூரப்பா அவரது கருத்தை திணிக்க முயல்வதாகவும் அமைச்சர் அன்பழகன் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டிருக்கிறது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் பதில்!

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில்அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? என அரசு விளக்கம் அளிக்க பொன்முடி கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பழகன், நீதிமன்ற தீர்ப்பின் படி அரியர் மாணவர்கள் விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுதவே தயாராக இல்லை என்றும் அமைச்சர் கூறினார். மேலும், சூரப்பா தனது தனி இமெயில் மூலமாக ஏஐசிடிசி கடிதம் எழுதியதாகவும் அதனை பற்றி மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.